உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 4-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், தமிழகத்தை சேர்ந்த நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரைப் போட்டியின் தலைப்புகள்:

  • 5-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு "அண்டை வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி.”
  • 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு "பூமியில் வாழுஞ்சூழலற்றுப் போனால்...அடுத்து என்ன?"
  • 11 மற்றும் 12 ஆம் மாணவ, மாணவியருக்கு "இன்னொரு கிரகத்துக்கு இன்ப சுற்றுலா போவாமா.?"


கட்டுரைகள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அப்படியே சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டது. கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவியர்களின் கையெழுத்தில் ஏ4(A4) அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தலும் அவசியம். 

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் பெயர், வயது, வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்க வேண்டும்.

கட்டுரைகள், அக்டோபர் 5 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக இயக்குநர், ஐ.பி.ஆர்.எ/ இஸ்ரோ,

மகேந்திரகிரி (அஞ்சல்)

திருநெல்வேலி -627133 

தமிழகம் 

தொலைபேசி எண்: 04637-281210, 283510

தமிழ், ஆங்கிலம் கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...