டிசம்பர் முதல் 500-க்கும் மேற்பட்ட ரயில்களின் பயண நேரம் குறைகிறது - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்ற பின், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொலைதூரம் செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறது. 700 முக்கிய ரயில்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

50 எக்ஸ்பிரஸ் ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், தொலைதூர ரயில்களில் பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைக்கப்பட உள்ளது. 700-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரமும் குறைக்கப்பட உள்ளது.  இதேபோல, எஞ்சின் மாற்ற எடுத்துக் கொள்ளும் காலம் அரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கப்படுகிறது. 23 ரயில் நிலையங்கள் அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

சிக்னல்களை சரிபார்த்தல், ரயில்தண்டவாளங்களைப் புதுப்பித்தல், மூன்றாவது வழித்தடத்தை அமைத்தல், பயணிகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 12 மாதங்களுக்குள் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை ஒழிக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...