நலவாரிய செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கையைக் கண்டித்து நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள்

இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இன்று இராமநாதபுரத்தில் செயல்படும் நலவாரிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது விபத்து மரணம், இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட கேட்பு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும். இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும். 6 மாத காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சிஐடியு கட்டிட கட்டுமானச் சங்க பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...