ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலிலதா மரணம் பற்றி தினந்தோறும் பல்வேறு புதுப்புது அதிர்ச்சி தகவல் வெளியாகி வரும் நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மீதான நடவடிக்கை என்ன, விசாரணை ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்படும் என்ற கேள்விக் கணைகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது சரமாரியாக பாய்ந்தது.  இந்த நிலையில், தற்போது  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர் சந்தேகம் எழுப்பினர். இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பிற்கு முன் ஓ.பி.எஸ். தரப்பு கோரிக்கையில் ஒன்றான ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...