இதயத்திலுள்ள கட்டியினை நீக்கி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி (37) மூச்சுத் திணறல் காரணமாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் மனோஹர் அவருக்கு எக்கோகார்டியோகிராம் சிகிச்சையினை மேற்கொண்டார். 

இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இடது வென்ட்ரிக்லிலிருந்து வெளியேறும் ரத்த குழாயில் ஒரு பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இது மைட்ரல் வால்வில் இடைப்பட்ட தடங்கலை ஏற்படுத்தியது. இதனால் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என உறுதிசெய்யப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, கார்டியோத்தராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தியாகராஜமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் கட்டியை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.



இதுகுறித்து கார்டியோத்தராசிக் மருத்துவர்கள் கூறுகையில், இது போன்ற இதயத்தின் கட்டி மிகவும் அரிதானது. இது போன்ற கட்டிகள் சுமார் 0.02% (பத்து லட்சம் பேர்களில் 200 கட்டிகள்) ஆகும். Myxomas polypoid, என்ற இந்த கட்டி சுற்று வடிவம் அல்லது ஓவல் முட்டை வடிவில் இருக்கும். அவை ஒரு மென்மையான அல்லது சுற்றளவு மேற்பரப்புடன் வலுவாக, பொதுவாக வெள்ளை, மஞ்சள், அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்காண சிகிச்சை மார்பின் நடுப்பகுதியை திறந்து வழக்கமான மார்பகத்தைத் திறப்பதன் மூலம் அகற்றுதல் ஆகும்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நுண்துளை இதய அறுவை சிகிச்சை, MICS நுட்பம் வந்துள்ளது. இந்த நடைமுறை மூலம், ஒரு சிறிய கீறல் சுமார் 3 அங்குலம் மார்பு வலது பக்கத்தில் செய்யப்படுகிறது.

இதன் மூலம் முழு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கட்டியை வெற்றிகரமாக நீக்கியது சிறப்பு. இதய நுரையீரல் இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு தொடை (கால்) ரத்தகுழாய்கள் மூலம் இதயம் நிறுத்தப்பட்டது. MICS முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காலம் குறைக்கப்பட்டது. இரட்டை மூச்சுக் குழாய் சிறப்பு மயக்க மருந்து தொழில்நுட்பத்தை மருத்துவர் அசோக் மற்றும் மருத்துவர் நரேந்திர மேனன் மற்றும் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர் என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...