சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் - சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி அறிக்கை

சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்.

இவ்விழா குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும். விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்" என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,  கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அமைச்சர் அவர்களே, சிவாஜி கணேசனுக்கு (எங்கள் தந்தைக்கு) மணி மண்டபம் அமைப்பது என்பது முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார்.

தந்தையின் மணி மண்டபத்தை அரசு திறந்துவைப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், அந்த திறப்புவிழாவில் முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.

தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது தனது தந்தையை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எனவே, திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்,அதிகாரிகள் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் குடும்பத்தினரும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் உங்கள் தரப்பிலிருந்து நல்லதொரு பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு சிவாஜி குடும்பத்தினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...