கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை ராஜ வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பராக்கத்தி ஊர்வலம் நாளை அதிகாலை முதல் நடைபெற உள்ளதால் நகரில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-​

முதலாவது ஊர்வலம் காலை 5.30 மணிக்கு ராமச்சந்திரா ரோட்டில் புறப்படும் போது சுக்கவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் காந்திபார்க் டி.பி. சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஊர்வலம் சுக்கவார்பேட்டை அடையும் போது பழைய மேம்பாலத்தில் இருந்து சுக்கவார்பேட்டை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் மரக்கடை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி டவுன்ஹால் வைசியாள் வீதி வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பேரூர் செல்வபுரத்தில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சிவாலயா சந்திப்பு மற்றும் செல்வபுரம் உயர்நிலைப் பள்ளி சாலையில் வலதுபுறம் திரும்பி உக்கடம் பைபாஸ் வழியாக உக்கடம் வந்து பைபாஸ் சுங்கம் வந்து வெஸ்ட் கிளப் சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் வந்து ரயில்வே நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2-வது ஊர்வலம் மேட்டுப்பாளையம் சாலை அழகேசன் சாலையை அடையும் போது என்.எஸ்.ஆர் சாலை மற்றும் ஏ.ஆர்.சி. சந்திப்பில் இருந்து வடகோவை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஏ.ஆர்.சி. சந்திப்பிலிருந்து சிவனாந்த காலனி சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பூமார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில் இடதுபுறம் திரும்பி பாரதிபார்க் சாலை 4.என்.எஸ்.ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லலாம்.

ஊர்வலம் ஆர்.ஜி. வீதியை அடையும் போது சுக்கரவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும சுக்கரவார்பேட்டை சந்திப்பில் இருந்து காந்திபார்க் டி.பி..சாலை கௌலிபிரவுன் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

ஊர்வலம் விசிவி சாலையில் வரும் போது புருக்பாண்டு சாலையில் இருந்து தேவங்கபேட்டை சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறம் திரும்பாமல் நேராக புருக்பாண்டு சாலையில் சென்று பழைய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

 

மேற்படி, போக்குவரத்து மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...