அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : கேரள மருத்துவமனைகளால் புறக்கணிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் கை மற்றும் கால்களில் வெட்டுப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, வெட்டுக்காயமடைந்த ராஜேந்திரனுக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

தொடர்ந்து, வேலாயுதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தாமதமானதால் காலில் உள்ள செல்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதனிடையே, இன்று ராஜேந்திரனுக்கு கேரள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சிகிச்சை அளிக்க மறுத்த கேரள அரசு மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

இது குறித்து ராஜேந்திரனின் மகன் ராகவன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில், 'என் தந்தைக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சிகிச்சை அளிக்க தாமதமானதால் என் தந்தையின் காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

எங்கள் மொத்த குடும்பமும் தந்தையின் வருமானத்தை நம்பியே உள்ளது. எனது தந்தையின் கால் பறிபோனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு எங்கள் படிப்பும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்ட கேரள மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...