கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் - மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தமப்பதி ஊராட்சியில் “ஸ்வச்ச ஃபக்வாடா” என்ற கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தும், பார்த்தீனிய செடிகளை அகற்றியும், துப்புறவு பணிகளை மேற்கொண்டும் கிராமவளம் மற்றும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, கோவை மாவட்டம் “ஸ்வச்ச ஃபக்வாடா” எனும் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் கடந்த 1-ம் தேதி தொடங்கப்பட்டு வரும் 15 -ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும்; கிராமவளம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

 இவ்வியக்கத்தின் நோக்கம், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல், அனைத்து கிராம ஊராட்சிகளையும் தன்னிறைவு அடைய செய்தல், பொது இடங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரித்தல் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே தெரிவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இச்சிறப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும், அரசுடன் இணைந்து தங்களது சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திட உதவிடுமாறும், தங்களால் இயன்ற அளிவிலான மரக்கன்றுகளை நடவு செய்து நமது கிராம பசுமையாக மாற்றிட உதவிடுமாறும் இத்தருணத்தில் கேட்டுக்கொண்டு, இத்திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, கிராமப்புறங்களை திறந்த வெளி கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்றவும், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவதன் அவசியத்தினை குறும்படங்கள் மூலம் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மின்னனு விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் .ஹரிஹரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், வீ.பத்மாவதி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .அ.ரவிச்சந்திரன், பணிமேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...