டெங்கு மண்டலமாகும் கொங்கு மண்டலம்- கோவையில் ஒரேநாளில் இருவர் பலி


கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் இருவர் பலியான சம்பவம் டெங்கு குறித்தான அரசின் நடவடிக்கை மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முக்தி முண்டா (18). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவைக்கு மில் வேலைக்காக வந்தார். 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வந்த அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முக்தி முண்டா-விற்கு மஞ்சள் காமாலை இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முக்தி முண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, சிறுமுகை இரும்புப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காவேரி (25) கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து டெங்கு குறித்தான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்து வரும் நிலையில், தொடர்ந்து கோவையில் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...