வால்பாறை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிகளை சேதம் செய்த காட்டு யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்த நல்லமுடி எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் முகாம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் அங்கு அமைந்துள்ள ரேசன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சென்ற யானைக் கூட்டம் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான உரக்கிடங்கின் சுவற்றை உடைத்து அங்கிருந்த உர மூட்டைகளை சேதப்படுத்தியது.

மேலும், தாய்முடி டிவிசன் பகுதியில் சின்னதுறை என்பவரது வீட்டின் சுவற்றையும் உடைத்தது. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அருகில் இருந்த நல்லமுடி வனப்பகுதிக்குள் யானைகள் தஞ்சமடைந்தன. இதனால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவித்து வருகின்றனர்.

இதனிடையே, வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மதி என்பவரின் கடை கதவினையும், அருகாமையில் இருந்த கணேசன், ராஜன், தர்மலிங்கம் ஆகியோரின் வீட்டின் ஜன்னல், கதவினையும் உடைத்து சேதப்படுத்தியது. 

இதுகுறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறையினரின் முகாம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி நுழைந்து சேதப்படுத்தி வருகிறது. இருப்பினும், வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதில்லை என்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...