அப்துல்கலாம் உருவத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்த நபரால் பொதுமக்கள் நெகிழ்ச்சி



கோவை அரசு மருத்துவமனையில் உள்ள இருப்பிட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அப்துல்கலாம் உருவத்தில் ஒருவர் வந்தார். அவரை பார்த்த பொதுமக்கள் பலரும் வணங்கியதோடு அவரோடு 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

இதையறிந்த செய்தியாளர்கள் பலரும் அவரிடம் பேட்டி காண திரண்டனர். அப்போது அவர் கூறியதாவது:- 

எனது பெயர் உடுமலை கலாம். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உருவத்திலே இருப்பதால் என்னை அனைவரும் உடுமலை கலாம் என்றே அழைக்க தொடங்கிவிட்டனர்.

உடுமைலை பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன். அப்துல்கலாம் போன்ற தோற்றம் இருப்பதற்கு எந்த ஒப்பனைகளையும் செய்துகொளவது இல்லை. இயற்கையாகவே எனக்கு அந்த உருவத்தை கடவுள் கொடுத்துள்ளார்.

இரு முறை அப்துல்கலாமை சந்தித்துள்ளேன். அவரைப்போலவே இருப்பதால், என்னை பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு சென்று உரையாற்ற கூறினார். நிதி வசதியும், கல்வியறிவும் இல்லை என்று அவரிடம் கூறினேன். உதவும் இளைஞர்கள் அமைப்புடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தினார். தற்போது அந்த அமைப்பினருடன் சமூகப்பணியாற்றி வருகிறேன்.

இதுவரை 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று கிராமப்புற மேம்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். அதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அப்துல்கலாம் உரையாற்றியது போலவே மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் உரை நிகழ்த்தி வருகிறேன்.

என்னை பார்த்து பலரும் அப்துல்கலாம் என்றே நினைத்து புகைப்படம் எடுத்துகொள்வது பெருமையாகவே உள்ளது. தற்போது இதய சிகிச்சைக்காக கோவை வந்துள்ளேன். இங்கு அரசு மருத்துவ அதிகாரிகளும், பொதுமக்களும் எனக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திடீரென அப்துல்கலாம் உருவத்தில் வந்த நபரை பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை இருப்பிட அதிகாரி சவுந்திரவேல், உடுமலை கலாம்  உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...