தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர் பலிக்கு காரணம் - கோவை மாவட்ட ஆட்சியர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர்பலிக்கு காரணம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20 பேரும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 190 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார். 

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டேன். காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போதுமான அளவில் உள்ளனர்.

கோவை மட்டுமல்லாது நீலகிரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காய்ச்சல் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்கள் தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். ஆனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நேரத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை அணுகும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். 

மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...