கோவை மாநகராட்சியின் வரி உயர்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோர் கைது

கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, சிங்காநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், கோவை - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டதிலும் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாகவும், புதிய வரி விதிப்புகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய போராட்டக்காரர்கள், இதனை திரும்பப் பெறும் வரை போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...