அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்து வருகிறது. இதற்கான சுருக்க திருத்தப்பணி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும். முதலில் அதன் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.



அதில், 14 லட்சத்து 20 ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 40 ஆயிரத்து 845 பெண் வாக்காளர்களும், 283 மூன்றாம் பாலினத்தினரும் இடம் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் ஆர்.லால்வணோ, அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திமதி, கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...