மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இளைஞரின் நீண்டதூர இருசக்கரவாகன பிரச்சாரம்

நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை. 

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சினான் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நீண்ட தூர இருசக்கர வாகன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய அவர், அண்டை நாடுகளான  பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் என மொத்தம் 16,000 கி.மீ தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.



கடந்த ஜுலை 30-ம் தேதி தொடங்கிய இந்த வாகனப் பிரச்சாரமானது, செப்டம்பர் 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளின் அத்தியாவசிய தேவையை வலியுறுத்தி வாகனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட சினான் கோவைக்கு வந்தார். அவருக்கு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மலர்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். 

இவரது பயணம் குறித்து, கோவை மாற்றுத்திறனாளி அமைப்பினை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இவரது இந்த நீண்ட தூர வாகனப் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாநில மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு உதவியது. மாற்றுத் திறனாளிகளினாலும் எந்த இடையூறுமின்றி வாகனம் ஓட்ட முடியும் என்பதை, சினான் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...