இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் ”ஆடி ஏ5” பிராட்பேக்

ஆடி இந்தியா நிறுவனம் ஏ5 ரகத்தில் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு கார்களை வெளியிட்டுள்ளது.



இந்த கார்களின் விலை முறையே ரூ.54.02 லட்சம், ரூ.67.15 லட்சம், ரூ.70.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட் ரகமும் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகும் மாடல்கள் எனவும், எஸ் 5 மட்டும் அப்கிரேட் செய்யப்பட்ட ரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிதாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், உயர் செல்திறன்மிக்க ஓட்டங்கள், புதுமை படைக்கும் பொழுதுபோக்கு அம்சத்துக்கான தீர்வுகள், வீர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஆடி இன்டர்பேஸ் மொபைல்போன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 



ஆடி இந்தியாவின் தலைவர் ரகில் அன்சாரி கூறுகையில், ஆடியின் மறுகட்டமைப்பு ஆண்டாக 2017 உள்ளது. ஏ5 வகை இந்த புதிய சகாப்தத்தின் துவக்கம். புதிய மாடல், புதிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவில் சொகுசான ஒரு பயணத் தீர்வை உருவாக்கின்றனர்.  ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் போன்ற கார்களை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவில் 2017-ல் எங்களது அறிமுக இலக்கான 10 எண்ணிக்கையை எட்டி விட்டோம்.  என்றார். 



ஆடி கோயம்புத்தூர் முதன்மை டீலர் அனந்தகிருஷ்ணன் பேசுகையில், ஆடி ஏ5 இந்த மண்டலத்தில் சந்தைப்பங்கினை அதிகரிக்கும். அனைவரும் ஆவலுடன்  இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...