மாநகரில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்த வாலிபர்கள் கைது

கோவை மாநகர் பகுதிகளில் கடந்த பல நாட்களாக இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. தொடர் புகார்களின் அடிப்படையில் போலீசார் இரு சக்கர வாகன கொள்ளையர்களை தேடி வந்தனர். தொடர்ந்து, இருசக்கர வாகன கொள்ளையர்களை பிடிக்க 6 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இரு வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தனிப்படை போலீசார், சுங்கம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் விசாரித்தனர். அப்போது முறையான ஆவணங்களின்றி இரு சக்கர வாகனங்களை இயக்கியது தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) மற்றும் உக்கடம் பக்தியைச் சேர்ந்த ரியாசுதீன் (23) என்பதும், கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...