கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (09.10.2017) மாநகர, ஊரக பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்ககைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, இந்தக் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரகப்பகுதிகளிலும் சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடாத வகையில் பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் புறவெளிகளில் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று தண்ணீர் தேக்கிவைத்துள்ள தொட்டிகள், பிரிட்ஜில் உள்ள தண்ணீர் சேமிப்பான், வாளி போன்றவற்றினை சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.



நீண்டநாட்களாக கண்டிப்பாக தண்ணீர் சேமித்து வைக்ககூடாது அது சுகாதார சீர்கேட்டிற்கு (கொசு உற்பத்தியாகவே) வழிவகுக்கும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் என்று வரும் நோயிகளுக்கு உடனடியாக இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கிட வேண்டும். 

அதுபோலவே, பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வரும் குழந்தைகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் போர்கால அடிப்படையில், செயல்பட்டு நமது மாவட்டத்தின் சுகாதாரத்தினை பேணிக்காத்திட ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். 

இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாரதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...