பேருந்து பயணிகளிடம் 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் புகார்

கோவை மாவட்டம் டவுன்ஹாலில் உள்ள வைஷியாள் வீதியைச் சேர்ந்த தியாகராஜன் மொத்த நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில், ஜீவா, சேகர் ஆகிய இரண்டு ஊழியர்கள் ஊதியத்திற்கு பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அவர்கள் நகையை விற்பனை செய்வதற்காக இரண்டரை கிலோ நகையுடன் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு அரை கிலோ நகைகள் மட்டுமே விற்பனையானதால், எஞ்சிய 2 கிலோ நகையுடன் இருவரும் கோவைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். பேருந்து கோவை சாய்பாபாகாலனியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது, ஜீவா, சேகரிடம் இருந்த 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அவர்கள் கோவை சாய்பாபா காலனியில் உள்ள போலீஸில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார், புகார் அளித்த ஜீவா, சேகர் மற்றும் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...