கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு தினத்தையொட்டி துப்புரவு பணிகள் தீவிரம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  டெங்கு தடுப்பு தினத்தினை முன்னிட்டு அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில்  “முழுசுகதார தமிழகம் - முன்னோடி தமிழகம்” என்ற டெங்கு தடுப்பு தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில்,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வியாழக்கிழமையும், டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டதனடிப்படையில், வியாழக்கிழமைதோறும் கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் துப்புறவு சுகாதாரப்பணிகள், சிறப்பு மருத்துவமுகாம்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி என பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், கடந்த வாரம் இப்பணிகளில் அரசுடன் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளபட்டது. அதன்படி, இன்று (12.10.2017) தனியார் கல்லூரியை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ மாணவ, மாணவியர்களால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தினையும், சுற்றுப்புற பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டது. 

மாணவ மாணவியர்களாகிய நீங்கள், உங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் வகையிலான டயர்கள், டீகப்கள், தேங்காய் ஓடுகள், பழைய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை தென்பட்டால் உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் அல்லது அருகில் உள்ள உள்ளாட்சி அலுவலகங்களையோ, சுகாதார அலுவலகங்களையோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்திட வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை அனைவரும் நினைவில் கொண்டு சுயக்கட்டுப்பாடுடன் தங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளையும் தூய்மையுடனும், திறந்த தொட்டிகளிலோ, பாத்திரங்களிலோ தண்ணீர் தேக்கிவைக்காமலும் இருக்க வேண்டும்.

நமது கிராமத்தை தூய்மை கிராமமாகவும், நமது மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்றிடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனது மாவட்டம் முழுசுகாதாரம் பெற்ற முன்னோடி மாவட்டமாக மாற்றிட நான் என்னால் இயன்றவரை ஒத்துழைப்பேன் என்று அரசு அலுவலர்களுடன், தன்னார்வலர்கள், பொத்துறை நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் என அனைவரும் இன்று ஓர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு தம் வாழ்வினில் அதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் சுகாதார அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...