பல வருட போராட்டங்களுக்கு பின் இறுதியாக கோவை சிங்கபூருடன் விமான வழியாக இணைய போகிறது

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து எந்தவித நேரடி சர்வதேச விமான சேவைகளும் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. மேலும், வெளிநாடுகளுக்கு செல்வோர் இணைப்பு விமானத்தை பயன்படுத்துவதற்காக டெல்லி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, வர்த்தகம் செழித்த கொங்கு மண்டலத்தில் இருந்து சர்வதேச விமானசேவை வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், முதற்கட்டமாக, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானசேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன், கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள் பயன்பெறும் என்றார். 

நவம்பர் 18-ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது. இந்த அறிவிப்பு கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விமானசேவை நேரம் :

  • விமான எண் 165 : டெல்லியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும். இரவு 10.00 மணிக்கு கோவை வந்தடையும்.
  • விமான எண் 166 : கோவையில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்படும். மாலை 05.05 மணிக்கு டெல்லி சென்றடையும்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...