இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு: சுபேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு


இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுபேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கினை சிபிசிஐடி பிரிவினர் விசாரித்து வந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதில் சதாம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர். 

இந்நிலையில், கடந்த வியாழனன்று (நேற்று) பாலக்காட்டில் தலைமறைவாக இருந்த சுபேர் தனது மனைவியைப் பார்க்க கிணத்துக்கடவு ரயில்வே கேட் அருகே வந்தபோது அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி மதுரசேகரன் சுபேரை வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, இன்று (அக்டொபர் 13) சுபேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...