வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம்



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நேற்று (அக்..13) இரவு சுமார் 12 மணியளவில் 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து  வீடுகளை சேதப்படுத்தியது. குடியிருப்புவாசிகள் குணசேகரன், வேலன், செல்லத்துரை, மேகலா, மாரியாயி, முத்துலட்சுமி ஆகியோரின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்று அட்டகாசம் செய்துள்ளன  . மேலும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள், டி.வி, மிக்சி, உள்ளிட்ட பொருட்களையும் யானைகள் நாசப்படுத்தின. 



வீட்டில் இருந்தவர்கள் குழந்தைகளுடன் பின் வாசல் வழியாக தேயிலைக்காட்டிற்குள் தஞ்சமடைந்து கைபேசியின் மூலமாக அக்கம் பக்கத்தினர்களின் உதவியை நாடினர். பின்னர், விடிய, விடிய காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும், அவைகளை விரட்ட முடியவில்லை.  தொடர்ந்து, யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன.  இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டசாகம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.  அண்மையில், கருமலை பகுதியில் வேல்சாமி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  காட்டு யானைகளை, கும்கி யானைகளை வைத்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...