பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் பொதுச்சொத்துக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும்- மாநகர காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்து பொதுச்சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எந்த காரணத்தைக் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் அருகே மற்றும் மின் மாற்றிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.

நெடுஞ்சாலைகள் உட்பட போக்குவரத்து உள்ள எந்த சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுச்சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.

சட்டவிதிகளுக்குட்பட்ட மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...