மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 3-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்திகேயன் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், காந்தி நகர் மற்றும் என்.பி.சி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ள மாணவர் சாம்ராட் என்பவரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், டெக்ஸ்மோ கம்பெனி வளாகங்களில் டெங்கு கொசு உருவாவதற்கான காரணிகள் ஏதும் உள்ளனவா என்று ஆய்வு செய்து சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உத்தரவிட்டார்.



இதனையடுத்து, சத்யா நகரில் சுமார் 25 சென்ட் அளவிலான மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை அவர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...