வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு - வனத்துறையினர் அறிவிப்பு

வனவிலங்குகளின் நலன் கருதி வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, இன்னும் ஒருநாளே உள்ளது. இதனால், அனைவரும் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், வன எல்லைகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  சத்தம் மிகவும் குறைவான வெடிகளை பயன்படுத்தலாம் என்றும்,  வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தடாகம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி  மற்றும் காரமடை போன்ற பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் வனத்துறையினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுகளால் வனப்பகுதிக்குள் இருக்கும் விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வன எல்லையில் உள்ள கிராமத்தினரை சத்தம் குறைவான பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...