பல்லடம் பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் மாயம்- தொடரும் தேடுதல் பணி


பல்லடம் பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை இரு நாட்களைக் கடந்தும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பிரதீப் (34), விஜயன் (35), மாரியப்பன் (30), சுதாகர் (29), அன்பழகன் ஆகியோர் கொடைக்கானலிற்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த அக்டோபர் 15ம் தேதியன்று கோவைக்கு திரும்பி காரின் மூலம் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் சாலையின் திருப்பத்தில் கார் திரும்பும் போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிரதீப், விஜயன், மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்பழகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சுதாகர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுதாகர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பிஏபி வாய்க்காலில் நீர் அதிகளவில் உள்ளதால் சுதாகரின் உடல் வாய்க்காலின் அடிப்பகுதியில் உள்ள பாறை இடுக்கில் மாட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் பணி நடைபெறுகிறது. இன்று உடல் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.முத்தையா கூறுகையில், "இரவு நேரங்களில் கள்ளிப்பாளையம் பகுதியில் இந்த சாலையை கடப்பதே மிகவும் அச்சுறுத்தலாக  உள்ளது. அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத காரணத்தால் வாய்க்கால் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. மேலும், இங்கு தெருவிளக்குகளும் இல்லை. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் புகார் அளிக்கப்படவுள்ளது" என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...