வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் பீதி

வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் நேற்று (அக்.,18) நள்ளிரவு 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை கதவு மற்றும் சுவற்றை உடைத்து பொருட்களை நாசம் செய்தது.



அருகாமையில் உள்ள மளிகை கடை மற்றும் தேவாலயத்தின் கதவுகள் மற்றும் சுவற்றையும் உடைத்து, நாற்காலி ஆகிய பொருட்களை நாசம் செய்தது. இதனைக் கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீ பந்தம் ஏற்றியும், கூச்சலிட்டும் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.  இதனைத் தொடர்ந்து, யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன .. குடியிருப்பு பகுதிக்கு வெகு அருகிலேயே யானைகள் இருப்பதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 



இதேபோல, வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட நடுமலை எஸ்டேட்டில் உள்ள களஅதிகாரி எபி என்பவரின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அருகில் உள்ள எஸ்டேட் மஸ்டர் கதவு மற்றும் சுவற்றையும் உடைத்தும், முடித்திருத்தகத்தையும்  சேதப்படுத்தியது. தொடர்ந்து வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முத்துமுடி எஸ்டேட், முருகாளி, பெரியகல்லார், நடுமலை, அணலி, பச்சமலை ஆகிய எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கும்கி யானையை கொண்டு காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...