கைத்தறி நெசவாளர்கள் புதிய நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கைத்தறி நெசவாளர்களுக்கென மகாத் காந்தி புங்கர் பீமா யோஜனா எனும் காப்பீட்டு திட்டம், மத்திய, மாநில அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்தினால் மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர ஊனம் அல்லது விபத்தினால் ஏற்படும் பகுதி ஊனம் உள்ளிட்டவற்றிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்பொழுது மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரன்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017- 2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை சரக உதவி இயக்குநரை வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் தங்கள் புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைந்த விபரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் அணுக வேண்டும்.

சரக உதவி இயக்குநர் அலுவலக முகவரி:- உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், 23 பாரதி பார்க், 2-வது குறுக்கு தெரு, சாய்பாபா காலனி, கோவை- 610011.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...