அக்.23 அன்று கோவையில் பிரதேச இராணுவப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்

110-வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 23ம் தேதியன்று கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் காலை 6 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில், பொதுப்பிரிவில் 8 காலிப் பணியிடங்களும், துப்புரவுப் பணிகளில் 3 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலை மற்றும் சுய தொழில்பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்சிசி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு முன்னிரிமை அளிக்கப்படும்.

மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று, தங்களின் கல்வி மற்றும் இதரத் தகுதி சான்றிதழ்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வி மற்றும் உடற்தகுதி:-

1. பொதுப்பிரிவு காலிப்பணியிடத்திற்கு 10ம் வகுப்புத் தேர்வில் 45 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. துப்புரவுப் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

3. 18 வயது முதல் 42 வயதிற்கு உட்பட்டு 160 செ.மீ மற்றும் அதற்கு மேல் உயரம் உடையவராக இருக்க வேண்டும். 

4. மார்பளவு 77 செ.மீட்டரும், விரிந்த நிலையில் 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 50 கிலோ எடை உடையவராக இருத்தல் அவசியம்.

5. குறிப்பாக, அனைத்து விதத்திலும் பொருத்தமாக மருத்துவத் தகுதி இருத்தல் வேண்டும்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...