டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, குடிநீர் வினியோகப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (அக்டோபர் 20) தொண்டாமுத்தூர் ஒன்றியம் இக்கரைப்போளுவாம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அதிகாலையில் குடிநீர் வினியோகப்பணிகள் தொடர்பாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார். மேலும், திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்போது குடிநீரில் குளேரின் அளவினில் மாற்றம் கண்டால் ஊராட்சி அலுவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும்படியும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றம் செய்து, புகைப்பட அறிக்கையாக சமர்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இதுபோன்றே, அதிகாலையில் மாவட்டத்திலுள்ள ஊரக பகுதிகளில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும். எனவே, அலுவலர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் முழு சுகாதாரத்தினை காத்துக்கொள்ள வேண்டும் என .ஹரிஹரன் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...