சசிக்குமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள்: உக்கடம் அருகே தேடும் போலீசார்

கோவை உக்கடம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் (37) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அபுதாகிர் மற்றும் சதாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், முபாரக் என்பவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கில் கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை கடந்த அக்டோபர் 12-ம் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சசிக்குமாரை கொலை செய்த விதத்தை நடித்துக்காட்டினார். 

மேலும், சசிக்குமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள நாய்கள் கருத்தரிப்பு தடுப்பு மையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சசிக்குமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை தேடும்பணியில் போலீசார் இன்று ஈடுபட்டுள்ளனர்.



மாநகராட்சியின் கழிவு நீர் உரிஞ்சும் வாகனங்கள் மூலமாக இன்று காலை முதல் கழிவுநீர் கால்வாயில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இந்த நீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்தால் தான் ஆயுதங்களை கைப்பற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...