சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு- விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பொதுப் பணித்துறை சின்னவேடப்பட்டி தடுப்பணையை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், சங்கனூர் பள்ளத்தில் இருந்து தடாகம் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. அவ்வாறு வரும் நீரினை ஏரியில் தேக்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெரும் வகையில் கடந்த 1950 ஆம் ஆண்டு சின்னவேடப்பட்டியில் தடுப்பணை கட்டப்பட்டது. 5 சட்டர்கள் கொண்ட இந்த தடுப்பணையில் மூன்று சட்டர்கள் நீரினை வெளியேற்றவும், இரண்டு சட்டர்கள் மணலை தடுத்து நிறுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.



இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி இந்த தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சின்னவேடப்பட்டி ஏரியில் நீர் வழித்தடம் அடைபட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவணம்பட்டி, அரசூர், கணபதி, நீலம்பூர், சின்னியம்பாளையம், கோவில்பாளையம் மற்றும் குரும்பப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சின்னவேடப்பட்டி நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்றும், தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி தடுப்பணையினை சீரமைக்கும் பொருட்டு பொதுப்பணித் துறை ரூ.30 லட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...