விவசாயிகள் பெயரில் இடைத்தரகர்கள்: கோவையில் உழவர் சந்தையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்து அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் இன்று உழவர் சந்தையை முற்றுகையிட்டனர்.



சிங்காநல்லூர் ஹவுசின்ங் யூனிட் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் திரளாக இங்கு காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் உழவர் சந்தையாக விளங்கி வரும் இங்கு சமீப காலமாக நிர்ணயம் செய்யப்படும் விலைபட்டியலுக்கு அதிகமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல காய்கறி வாங்க வந்த பொது மக்கள், உழவர் சந்தை விலைபட்டியலை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, உழவர் சந்தை அதிகாரியான கில்டா ஸ்டீபனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபடுவதாகவும், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கு உழவர் சந்தையில் விற்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இது போன்று இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்துவிட்டால், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறிக்கு உள்ளாவதுடன், பொதுமக்களும் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறி உடனடியாக இடைத்தரகர்களை வெளியேற்ற வேண்டும். விலைப்பட்டியலில் உள்ளவாறு நியாயமான விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உழவர் சந்தை அதிகாரி கில்டா ஸ்டீபனிடம் மனு அளித்தனர்.



மக்களின் இந்த திடீர் முற்றுகையால் சிங்காநல்லூர் உழவர் சந்தை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...