கோவையில் இருந்து திருச்சிக்கு மாறுகிறது மத்திய கலால்துறை அலுவலகம்

கடந்த 55 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வந்த மத்திய கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த 1962 -ம் ஆண்டு முதல் கோவையில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஜி.எஸ்.டி வரி மற்றும் சுங்கத்துறையும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வரும் 31-ம் தேதி வரை கோவையில் செயல்படும், மத்திய அரசின் கலால்துறை அலுவலகம், நவம்பர் 1-ம் தேதி முதல் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.  எஞ்சிய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் கோவையிலேயே செயல்பட உள்ளது. 

இது தொடர்பாக, கோவை சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாசராவ் பேசுகையில், ”கோவையில் வரும் 31-ம் தேதி வரை மட்டுமே, சுங்கத்துறை அலுவலகம் செயல்படும்.  மத்திய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் தற்போதைய அலுவலகத்திலேயே இயங்கும்.” இவ்வாறு அவர் கூறினார். 

கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...