டெங்கு ஒழிப்பு பணிகள் : மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகளவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் வீதியில் இன்று (அக்டோபர் 25) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளை பார்வையிட்டார்.



இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதேப்போன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதனைத்தொடர்ந்து, சிறப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...