டிச.,15-ம் தேதி சேலம் கோட்டம் ஓய்வூதியர் குறைதீர்ப்பு நாள்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள், வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சேலம் கோட்ட பழைய கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்க வளாகத்தில்  ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் நடத்த உள்ளது.  எனவே, ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு 31.10.2017க்குள்  முன்னதாகவே கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம். 

இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான குறைகள், கருணை அடிப்படையிலான பணி வழங்குதல் சம்பந்தமான குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் காப்பாளர் தொடர்பான குறைகள், மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.  மேலும், ஏற்கனவே நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்ப்பு மன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு திருப்திகரமாக பதிலளிக்கப்பட்ட குறைகளும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...