நண்பர்களுக்குள் பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை : கொலையாளிகளை கைது செய்ய சகமாணவர்கள் கோரிக்கை

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன்-தாரா தம்பதியினர். இவர்களது மகன்கள் ரஞ்சித்குமார் (22), அரவிந்த். ரஞ்சித் குமார் கோவைப்புதூர் பகுதியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்கி தொலைதூர கல்வி மூலம் பிபிஏ படித்து வந்தார். 

இந்த நிலையில், இவரது நண்பரான சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரது தங்க சங்கிலி காணாமல் போனது. இதில் ரஞ்சித் குமார் மீது சந்தேகம் கொண்ட அபுபக்கர், கடந்த 12ம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களான ஆதித்யா, தர்வேஷ், அசார், சபீக் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு ரஞ்சித்குமாரை தாக்கினர். இதில் ரஞ்சித் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.



இந்த தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்த ரஞ்சித்குமார் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூற, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கடந்த 14ம் தேதியன்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித் குமாருக்கு நேற்று (புத்தனன்று) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 



இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே, முதற்கட்டமாக தாக்குதலில் தொடர்புடைய ஆதித்யா-வை மதுக்கரை போலீசார் கைது செய்திருந்தனர். 



தற்போது மாணவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ரஞ்சித்குமாரின் உயிரிழப்பு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.

இதனால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...