அ.தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் சாலை மறியல்

கோவை, மதுக்கரை பகுதியை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நவக்கரை அடுத்த மாவூத்தம்பதி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எட்டிமடை சண்முகத்திற்கும் இடையே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சிணை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என மதுக்கரை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, தி.மு.க. பிரமுகரான சதீஷ் தான் அதனை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகத்தின் ஓட்டுநர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், சரியான ஆதாரம் இல்லாமல் திமுக பிரமுகர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதியதன் பேரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...