கந்துவட்டி தொடர்பாக காவல் நிலயங்களில் புகார் பெற மறுத்தால் டி.எஸ்.பி.க்களிடம் புகார் அளிக்கலாம் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் அந்தந்த காவல் எல்லைகளுக்கு  உட்பட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்பு  தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக, டாக்டர்.Pa.மூர்த்தி சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

நம் நாட்டில் கந்துவட்டி பிரச்சனை என்பது கடந்த 1500 ஆண்டுகளுக்கு   முன்பு இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள்  கொடுமைகளை அனுபவித்த கதைகளை  வரலாறு நமக்கு தெரியப்படுத்துகிறது. இன்னும் இந்தநிலை தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.  

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படும் மக்கள் தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல்  நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சட்ட விதிமுறைகள் காரணமாக காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் உடனடியாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம்.  

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவல் எல்லைகள் 5 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பேரூர்,பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி என்று பிரிக்கப்பட்டுள்ள இந்த சரகங்களுக்கு தனித்தனியே துணை மாவட்ட காவல் கண்காளிப்பாளராகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது என்னிடம் புகார் தெரிவிக்கலாம். 

கந்துவட்டி தொடர்பாக  வரும் புகார்களின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  அலுவலக தொலைபேசி எண் : 0422-2300600

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...