பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு

திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தண்ணீா் திறந்து வைத்தார்.

உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று  அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. வாய்க்கால் வழியாக வினாடிக்கு 84 கனஅடி தண்ணீா் 220 நாட்களுக்கு திறக்கப்படும்



இதனால், 2,786 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் 41.56 அடி நீா்மட்டம் உள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு  788 கனஅடியாக உள்ளது.



இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா் திரு.மகேந்திரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியா் திரு.பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனா்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...