அதிக அளவு ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனத்திற்கு விருது

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் சொடலமுத்து அன்ட் கோ நிறுவனத்திற்கு சிறப்பு  ஏற்றுமதி விருதை கேரள அமைச்சர் வழங்கி கவிரவித்தார். 



கோவையை மையமாகக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வெளிநாடுகளுக்கு அதிகளவிலான வர்த்தகத்தை செய்து வருகின்றன சில நிறுவனங்கள். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு, ஆண்டுதோறும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், 2015-2016 ஆம் ஆண்டில், அதிகளவில் ஏற்றுமதி செய்த சொடலமுத்து அன்ட் கோ நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. கே.எஸ். பாலமுருகனிடம், கேரள தொழில்துறை அமைச்சர் திரு. ஏ.சி. மொய்தீன் வழங்கினார். 

1970-ம் ஆண்டு முதல் காகிதக் கோண்கள், குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம்,  அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, எகிப்து, துருக்கி, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...