கோவையில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை: பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றியதால் உயிர் தப்பினர்

கோவை, அக்டோபர்.28: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, கொடுத்த கடன் வராததால், மகனுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விசைத்தறி உரிமையாளரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குமார் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, கோவை எஸ்.பி. ஆபிஸில், தனது 7 வயது மகனுடன் குமார் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.



இதுதொடர்பாக, புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள், குடிகாரர் என புறக்கணித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தன் மீதும், தன் 7 வயது மகனின் உடல் மீதும் ஊற்றியதுடன், தீப்பற்ற வைக்க முற்பட்டார்.

அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர் சொர்ணகுமார் என்பவர், அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரைக் காப்பாற்றினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...