வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை மோதி சிறுவன் காயம்

கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சிறுவன் மேல் மோதிச் சென்றதால் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ரோப்பமட்டம் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று கோழியை வேட்டையாட சிறுத்தை வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பவரது மகன் தினேஷ்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கோழியை பிடித்து விட்டு திரும்பிய சிறுத்தை அச்சிறுவனின் மேல் மோதிச் சென்றது. இதில் நிலைகுலைந்த தினேஷ்குமார் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உருளிக்கல் மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 



வால்பாறை பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகள் மற்றும் கோழிகளை தாக்கி கொன்று வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...