கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க மனு


கோவை, அக்டோபர் 30: கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பாரத் சேனா அமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



நெல்லையில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் சிலர் அவசர தேவைக்காக வட்டிக்கு பணம் பெற்றுள்ள நிலையில், அவர்களின் ஏடிஎம் அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு கந்து வட்டி வசூலிப்போர் நிர்பந்தம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கோவையில் பல குடும்பங்கள் இது போல கந்து வட்டி கும்பலிடம் சிக்கி உள்ள ன . அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...