போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க அதிரடி தடை

அக்டோபர் 30: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கோவை நுகர்வோர் மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால், அது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அதைவிடுத்து, சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கிறார்கள். இதனால், பொதுமக்களின் நலன் கருதி, சிக்னல்களில் இனி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கை இன்று (அக்.,30) விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும், இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் காலம் முடிவடைந்த பிறகு, அதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இனிமேல் யாரும் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது எனத் தெரிவித்தனர். இவ்வழக்கில், முன்னர் வாய்மொழியாக அறிவுறுத்தியிருந்த நீதிமன்றம், தற்போது விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும். உயிரோடு இருக்கும் நபர்களுக்கு கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது போக்குவரத்து சிக்னலிலும் விளம்பர பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...