கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலனை விடுதலை செய்யக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் மாவட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.



இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

"சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி படுகையில் மணல் கடத்தல், கூடங்குளம் அணு உலை, கனிமவளங்கள் கடத்தல், இதர ஆறுகளில் மணல் கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக போராடி வரும் அவரை சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு ஆதரவாக காவல் துறை கைது செய்துள்ளது. உடனடியாக முகிலனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூடங்குளத்தில் போராடியதற்காக பொதுமக்கள் மீது பதியப்பட்ட 132 வழக்குகளையும் திரும்பப் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியும் இது வரை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...