நண்பரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை

கோவை, அக்டோபர் 30:  கடந்த 2013-ம் ஆண்டு நண்பனைக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார். 

கூடலூரைச் சேர்ந்த வஹிதா பானு என்பவர் கணவர் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்தால் அடிமையான தனது கணவருடன் வாழ பிடிக்காத பானுவுக்கு, எதிர் வீட்டைச் சேர்ந்த மதிவாணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்போது, கோவையில் ஏதாவது நிறுவனத்தில் தனக்கு வேலை வாங்கித் தருமாறு பானு, மதிவாணனிடம் கேட்டுள்ளார். அதன்பேரில், இருவரும் கோவைக்கு வந்துள்ளனர். 

கோவையில் துணிக்கடையில் பானுவுக்கு வேலைகிடைத்தது. அப்போது, சாய்பாபா காலனி, கே.கே.புதூரைச் சேர்ந்த சதீஷ் (30) என்ற தனது நண்பனை மதிவாணன் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால், பானுவுடனான தொடர்பை மதிவாணன் சிறிது காலம் துண்டித்திருந்தார். பின்னர், சுமார் 6 மாதத்திற்கு பிறகு, உறவைப் புதுப்பிப்பதற்காக அலைபேசியில் பானுவை மதிவாணன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனக்கும், சதீஷிக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக பானு கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த மதிவாணன், சதீஷை கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, கண்ணில் மிளகாய் பொடித்தூவி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீஸார், மதிவாணனை கைது செய்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும்,  அதனைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்படும் என அவர் ஆணையிட்டார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...