தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர் பலி

கோவை, அக்டோபர் 31: முத்து பழனியப்பன் (54), தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின் போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, அவரின் பிறந்தநாளான நேற்று தமிழக அரசு சார்பில் குருபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதலைமச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். 

கோவை மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படையில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்து பழனியப்பன் என்பவரும் பாதுகாப்புக்கு சென்றிருந்தார். . இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு பணியை முடித்த அவர் பரமக்குடியை அடுத்த முல்லைப்பள்ளி என்ற இடத்தில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் . தற்போது அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

காவல்துறையில் பணியாற்றும் போதே முத்து பழனியப்பன் பலியானதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலை கிடைக்கும் என்பதும், அவரது இளைய மகன் அகில் சுஜின் கோவையில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...